search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.35 லட்சம் மோசடி- அரியலூர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
    X

    ரூ.35 லட்சம் மோசடி- அரியலூர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

    அரியலூரில் வெளிநாடு செல்வதற்காக விசா, விமான டிக்கெட் எடுத்ததில் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் கடந்த 5.2.2018 அன்று 35பேரும் ஹாங்காங்கில் வேலைக்கு செல்லும் வகையில் விசா, விமான டிக்கெட் எடுத்து செல்வியிடம் கொடுத்துள்ளனர். அதனை செல்வி ஆய்வு செய்து பார்த்த போது அவை போலி விசா, போலி டிக்கெட் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய 2பேரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் உரிமையாளர் அல்போன்சை கைது செய்தனர். தலைமறைவான ஜியாவுல்ஹக்கை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×