search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டு அருகே மாந்தோப்புகளை சூறையாடிய காட்டு யானைகள்
    X

    பேரணாம்பட்டு அருகே மாந்தோப்புகளை சூறையாடிய காட்டு யானைகள்

    பேரணாம்பட்டு அருகே மாந்தோப்புகளில் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பீதிடையந்துள்ளனர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள முத்துக்கூர் கிராமம் தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

    இங்கு 2 குட்டி யானைகளுடன் மொத்தம் 6 காட்டு யானைகள் கடந்த 2 நாட்களாக சுற்றுகின்றன. அங்குள்ள விவசாய நிலங்கள், மாந்தோப்புகளில் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் பீதிடையந்துள்ளனர்.

    முத்துக்கூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடபெருமாள்ரெட்டி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் மாந்தோப்பில் இந்த யானைக்கூட்டமானது நேற்று மற்றும் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்தன. 5 மாமரங்களை அடியோடு சாய்த்தும், சுமார் 35 மாமரங்களில் கிளைகளை முறித்து சேதப்படுத்தின அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களை ருசித்தும், தென்னை, வேப்பமரத்தையும் முறித்தும், 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தீவனப்பயிரையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.

    மேலும் அருகிலுள்ள இவரது மகன் ராஜ்குமார் மாந்தோப்புக்குள் புகுந்து 15க்கும் மேற்பட்ட மாமரங்களை அடியோடுசேதப்படுத்தின, 50 மாமரங்களின் கிளைகளை முறித்தும், அருகிலுள்ள வெங்கட கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்புக்குள் புகுந்து அங்கிருந்த 3 மாமரங்களையும், ஒரு தென்னை மரத்தையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.

    மாந்தோப்பையே இந்த யானைக்கூட்டமானது ருசித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 3 டன் மாங்காய்களை நாசம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இப்பகுதியில் நன்கு விளைச்சலை கொடுத்து வந்த மாந்தோப்புகளை யானைக் கூட்டமானது விட்டு வைக்காமல் அடியோடு சூறையாடி கொண்டு வருவதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி இரவு நேரங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு கூட செல்லாமல் பீதியடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனசரகர் மூர்த்தி தலைமையில் வனவர் ரவீந்திரன் மற்றும் வனத்துறையினர் சென்று யானைக்கூட்டத்தை அருகிலுள்ள மோர்தானா காப்புக்காட்டிற்கு இன்று அதிகாலை போராடி விரட்டியடித்தனர். #tamilnews

    Next Story
    ×