search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னபட்டாகாடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்
    X

    சின்னபட்டாகாடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்

    திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. 100 மாடுபீடி வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊரின் தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷத்துடன் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு சென்றன.

    காளைகளை அடக்க முயன்ற போது கோவிலூரை சேர்ந்த ராகுல்(வயது 20), வைப்பூர் ஆசைத்தம்பி(34), தஞ்சாவூர் ஆனந்த்(19) சின்னப்பட்டாகாடு முருகானந்தம்(39), கீழஎசனை புண்ணியமூர்த்தி(24) உள்பட 11 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், மின் விசிறி, சைக்கிள், கட்டில், வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட காளைகள் திரும்ப திரும்ப விடப்பட்டதாலும், சிறு கன்றுகள் விடப்பட்டதாலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர். 
    Next Story
    ×