search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
    X

    செந்துறை அருகே அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

    செந்துறை அருகே அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆர்.எஸ். மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் கரூர்-அரியலூர் இடையே செந்துறை அருகே உள்ள சிட்டேரியில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உடையார் பாளையம் ஆர்.டி.ஓ.வுக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வெள்ளாற்றின் ஓரத்தில் மணல் கடத்த வசதியாக சாலை போடப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. உத்திரவின் பேரில் மாத்தூர் ஆர்.ஐ. செந்தில், ஆலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் அந்த சாலையை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் தூண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிட்டேரி முள்ளுகுறிச்சியை சேர்ந்த அருள் (வயது 40) என்பவர் அங்கு வந்து சாலையை துண்டிக்க கூடாது என்று கூறி தகராறு செய்தார். ஆர்.ஐ. செந்தில், கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகிய 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார். 

    இது குறித்து செந்தில் தளவாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இன்று அதிகாலையில் அருளை கைது செய்தனர். 
    Next Story
    ×