search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்காததால் விசைப்படகு மீனவர்கள் பாதிப்பு
    X

    மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்காததால் விசைப்படகு மீனவர்கள் பாதிப்பு

    புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தற்போது அவர்கள் தங்களின் படகுகளை கரையில் நிறுத்தி அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த நிவாரண தொகை புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு படகுகளை கடன் வாங்கி தான் சரி செய்யும் நிலை உள்ளது. தடைக்காலம் தொடங்கி கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

    நாகை மாவட்டத்தில் விசைபடகை கரையில் ஏற்றி பழுதுகளை சரி செய்வதற்கு அரசுடமை வங்கி மூலம் ரூ.5 லட்சம் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×