search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வழக்கு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வழக்கு

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

    இந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப் படுவதாகவும் கூறி இதை நிரந்தரமாக மூடக்கோரி கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூடு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டது.


    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

    அந்த ஆலையில் அடுத்த கட்ட உற்பத்திக்கு தயாராக இருந்தது தெரிந்த பிறகே மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூடும் உத்தரவை பிறப்பித்தாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் கூறியதாவது:-

    நாங்கள் சட்ட ரீதியிலான உதவியை நாட உள்ளோம். எங்களுக்கு இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு எங்களுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. எனவே நாங்கள் எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    Next Story
    ×