search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட வைகோவை போலீசார் வேனில் அழைத்து சென்ற காட்சி
    X
    மறியலில் ஈடுபட்ட வைகோவை போலீசார் வேனில் அழைத்து சென்ற காட்சி

    துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லையில் மறியல்- வைகோ உள்ளிட்ட 500 பேர் கைது

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.#SterliteProtest #BanSterlite #Vaiko
    நெல்லை:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சந்திப்பு பஸ் நிலையம் முன்பு வந்தனர். பின்னர் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்களை படத்தில் காணலாம்

    பின்னர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.#SterliteProtest #BanSterlite #Vaiko
    Next Story
    ×