search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.

    அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    Next Story
    ×