search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி குமாரசாமியுடன் செல்பி எடுத்த சிறுவன்
    X

    பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி குமாரசாமியுடன் செல்பி எடுத்த சிறுவன்

    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியுடன் சிறுவன் ஒருவன் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செல்பி எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.#Kumaraswamy
    திருச்சி:

    ஒருவார டென்‌ஷன் குறைந்ததும் திருச்சி ஸ்ரீரெங்கநாதரை தரிசித்து மனதையும், உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்தார்.

    முதல்வராக பதவி ஏற்க போபவர் ஏற்கனவே அரசியல் சிக்களுக்குள் இருப்பவர். எனவே ஏதேனும் சிக்கல் வந்து விட கூடாதே என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

    ஸ்ரீரங்கத்தில் காரை விட்டு இறங்கிய குமாரசாமி போலீஸ், உயர் அதிகாரிகள் புடை சூழ கோவிலுக்கு சென்றார். அப்போது ஒரு சிறுவன் பாதுகாப்பு வளையத்தையும் மீறி உள்ளே புகுந்து விட்டான்.

    போலீஸ் அதிகாரிகள் அவனை பிடித்து வெளியே தள்ளியும் அவன் விடவில்லை. தொடர்ந்து குமாரசாமியை நெருங்கி செல்வதிலேயே குறியாக இருந்தான்.

    ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை பிடித்து விசாரித்த போது ‘குமாரசாமியுடன் ஒரு செல்பி எடுக்கணும் சார்’ என்று கெஞ்சினான். இப்போ ரொம்ப முக்கியம். டென்‌ஷனாக்காதே ஒடு என்று அந்த அதிகாரி எச்சரித்து விரட்டினார்.

    ஆனாலும் விடாமல் தொடர்ந்த அந்த சிறுவனை பார்த்ததும் குமாரசாமி நின்று என்ன வி‌ஷயம் என்று விசாரித்தார். செல்பி எடுக்கும் விருப்பத்தை அவன் சொன்னதும் அவனை அருகில் அழைத்து உற்சாகமாக போஸ் கொடுத்தார். செல்பி எடுத்த சந்தோ‌ஷத்தில் அந்த சிறுவனும் அங்கிருந்து சென்று விட்டான்.



    அந்த சிறுவனின் பெயர் ஹரிகிருஷ்ணன் (14). கரூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஸ்ரீரங்கம் கிழக்கு உத்தர தெருவில் வசித்து வருகிறான். வாரம் தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவான்.

    வீட்டில் இருக்கும் போது கோவிலுக்கு வி.ஐ.பி.க்கள் வந்தால் எப்படியாவது அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வான். கடந்த செப்டம்பர் மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது அவருடனும் செல்பி எடுத்து இருக்கிறான்.

    நேற்றும் விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதை பார்த்ததும் யாரோ வி.ஐ.பி. வரப்போகிறார் என்பதை யூகித்துக் கொண்ட  ஹரிகிருஷ்ணன் அங்கு நின்ற போஸ்லீகாரரிடம் விசாரித்து இருக்கிறான்.

    குமாரசாமி வருவதை கேள்விப்பட்டதும் கர்நாடக முதல்வருடன் எப்படியாவது செல்பி எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து சுமார் 1½ மணி நேரம் வீட்டுக்கு வெளியே காத்து நின்று இருக்கிறான்.

    குமாரசாமியின் கார் வந்ததும் பின் தொடர்ந்து இருக்கிறான். அவனிடம், இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிக்குள் தைரியமாக செல்கிறாயே உனக்கு பயம் இல்லையா? என்றதும் ஏன் பயப்பட  வேண்டும்? எல்லோரும் மனிதர்கள்தானே என்று சர்வசாதாரணமாக கூறினான்.

    குமாரசாமியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பற்றி கூறும் போது, மிகவும் எளிமையாக இருந்தார். அது எனக்கு பிடித்தது என்றான்.#Kumaraswamy
    Next Story
    ×