search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
    X

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

    மாணவிகளுக்கு பாலியல் வரை விரித்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ந் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் (எண்2) உத்தரவிட்டுள்ளது.

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன்  வழங்க எதிப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    முன்னதாக கருப்பசாமியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #AruppukottaiProfessor #NirmalaDevi
    Next Story
    ×