
வேளச்சேரியை சேர்ந் வர் வினோத் (44). சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப பணியாளராக இவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக வேளச்சேரி ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.
1-வது நடைமேடையில் உள்ள ஒரு அறையில் அவர் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென புகுந்தது.
அவர்கள் கத்திமுனையில் வினோத் அணிந்திருந்த தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வினோத்தை தாக்கி விட்டு மோதிரம் செல்போனுடன் தப்பி ஓடினர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்றனர். தப்பி ஓடிய 4 கொள்ளையர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.