search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனநாயக ரீதியில் போராடும் ஜாக்டோ - ஜியோவினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது - ஜி.ராமகிருஷ்ணன்
    X

    ஜனநாயக ரீதியில் போராடும் ஜாக்டோ - ஜியோவினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது - ஜி.ராமகிருஷ்ணன்

    ஜனநாயக ரீதியில் போராடும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து வழக்கை இழுத்தடிப்பு செய்கிறது. அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசை வண்மையாக கண்டிக்கிறேன்.

    நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறும் மத்திய அரசு அதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்வதில்லை. இதனால் தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தால் ஏராளமான மாணவர்கள் எழுதி இருக்க முடியும்.

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இறந்திருக்க மாட்டார். இந்த பிரச்சினையில் மத்திய அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும் முறையான ஏற்பாட்டை செய்யவில்லை. கிருஷ்ணசாமியின் மறைவுக்கு இரு அரசுகளும் தான் பொறுப்பு. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஜனநாயக ரீதியாகப் போராடுகின்றனர். எனவே அவர்களை கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×