search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரியாபட்டி அருகே கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
    X

    காரியாபட்டி அருகே கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்

    காரியாபட்டி அருகே கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #CoOperativeSocietieselection

    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 30-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

    வேட்பு மனு தாக்கலில் அல்லாளப்பேரி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் தலைமையில் 14 பேரும், சத்திரம் புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் தலைமையில் 11 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    மே 2 வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையின் போது முறையாக எந்த வேட்பாளரையும் அழைக்காமல் தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார். வேட்பு மனு பரிசீலனை நேரம் முடிந்த பின்பு தேர்தல் அதிகாரி சங்க அலுவலகத்தை பூட்டினார்.

    வேட்பாளர் முத்து ராமலிங்கம் சென்று எத்தனை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது? எத்தனை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கேட்டதற்கு தேர்தல் அலுவலர் எந்த விபரத்தையும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

    மேலும் இறுதி வேட்பாளர் பட்டியலும் ஒட்டப்படவில்லை. தேர்தல் அதிகாரியிடம் வற்புறுத்தி கேட்டதற்கு மொத்தம் 25 வேட்பு மனுவில் 13 மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று முத்துராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

    வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவரத்தையும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அல்லாளப்பேரி. வல்லப்பன்பட்டி கிராம மக்கள் அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளரிடம் முறையிட்டனர்.

    அங்கு உரிய பதில் கிடைக்காததால் அல்லாளப்பேரி மாணிக்கவாசகர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    மேலும் 2 கிராம மக்களும் சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் தாலுகா அலுவலகம் வந்து கோ‌ஷங்கள் எழுப்பி காரியாபட்டி தாசில்தார் முத்துக்கிருஷ்ணனிடம் ஒப்படைக்க முயன்றனர்.

    தாசில்தார் வாங்க மறுத்து உங்களுடைய கோரிக்கையை மனுவாக கொடுங்கள் இதை கலெக்டருக்கு பரரிந்துரை செய்கிறேன் என்று கூறினர்.

    சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். #CoOperativeSocietieselection

    Next Story
    ×