search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் யார்டில் பராமரிப்பு - ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்
    X

    அரக்கோணம் யார்டில் பராமரிப்பு - ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்

    அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்றும், நாளையும் (செவ்வாய், புதன் கிழமை) ஜோலார்பேட்டை-சென்னை சென்டிரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் இருமார்க்கம் (வண்டி எண்: 16090/89) சென்டிரல்-திருப்பதி இருமார்க்கம் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் (16203/04) ரெயில்கள், சென்டிரல்-அரக்கோணம் (56001/02), அரக்கோணம்-செங்கல்பட்டு (56003/04 மற்றும் 56005/06) பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் இருமார்க்கம் (16053/16054) திருப்பதி-திருத்தணி இடையே இயக்கப்படும். மும்பை சி.எஸ்.டி.எம்.-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16351), திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரெயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.

    மூர்மார்க்கெட்-திருத்தணி பிற்பகல் 2.20, 5.40, 8.20 மணிக்கும், திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 6.30, மாலை 4.55, 8.20 மணிக்கும், மூர்மார்க்கெட்-திருப்பதி இரவு 7.10 மணிக்கும், திருப்பதி-மூர்மார்க்கெட் காலை 7.20 மணிக்கும், மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 6, 6.45, 8.20, 4.45, 5.45, 6.45 மணிக்கும், அரகோணம்-மூர்மார்க்கெட் காலை 6, 7, 8, 4.50, 6.10, 7.30 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×