search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைனில் என்ஜினீயரிங் விண்ணப்பம் - அலைச்சலை தவிர்க்க அறிவுரை
    X

    ஆன்லைனில் என்ஜினீயரிங் விண்ணப்பம் - அலைச்சலை தவிர்க்க அறிவுரை

    என்ஜினீயரிங் ஆன்லைனில் விண்ணப்பம் அளிக்கும் போது கிரெடிட், டெபிட் கார்டுகள் கொண்டு வருமாறு மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இது வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒற்றை சாளர கவுன்சிலிங் இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் கலந்தாய்வாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்காக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் ஆன்-லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்கியது.

    காலை 9 மணிக்கு தொடங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் காத்திருந்தனர். விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக 120 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 60 கம்ப்யூட்டர்கள் உள்ள அறை முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையாக மாற்றப்பட்டு இருந்தது. இ-மெயில் ஐ.டி. தெரியாத மாணவர்களுக்கு உதவுவதற்காக 30 கம்ப்யூட்டர்கள் தனியாக அமைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் சித்ராசெல்வி கூறுகையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கும் அறைகளும், கேன்டீன் வசதியும் காண்பரன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய மருத்துவ குழுவினரும் அமைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வரும் போது பிளஸ்-2 தேர்வில் தங்களது ஹால்டிக்கெட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். ஏனெனில் பெயர் பதிவுக்கு பிளஸ்-2வில் உள்ள ரோல் நம்பரே பதிவு செய்யப்படுகிறது.

    கிரெடிட், டெபிட் கார்டு எடுத்து வராத மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு வரும் அலைச்சலை தவிர்க்கும் வகையில் பெயர் பதிவு செய்யும் போதே இதனை எடுத்து வர வேண்டும் என்று தெரிவித்தார். ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளை பார்வையிட சென்னையில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் நிர்மல் குமார் வந்திருந்தார்.
    Next Story
    ×