search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் இன்று பரவலாக மழை- குற்றால அருவிகளில் தண்ணீர்
    X

    நெல்லை, தூத்துக்குடியில் இன்று பரவலாக மழை- குற்றால அருவிகளில் தண்ணீர்

    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இன்று பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குற்றாலம் அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தினாலும் வெப்ப சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிரச் செய்தது. நேற்று சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் சராசரியாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மானூர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பெரியகுளம் அருகே இசக்கிமுத்து என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள் இடிதாக்கி பலியானது.

    சேரன்மகாதேவி பகுதி யில் 3 மில்லி மீட்டர் மழையும், சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    நெல்லை மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ராதாபுரம் பகுதி கடலோர கிராமங்களிலும் இன்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் இன்று பரவ லாக மழை பெய்தது. மழை காரணமாக குற்றால அருவிகளில் இத மாக தண்ணீர் விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5.53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 21.95 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 77.88 அடியாகவும் உள்ளது. இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில்  கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக 100 டிகிரியை தாண்டி கடுமையான  வெயில் காணப்பட்டது. இதையடுத்து  வெப்பத்தினால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டில் இருந்தனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

     இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு திடீரென மழை பெய்தது. இதனால் அண்ணாநகர் , ராஜகோபாலநகர், டுவிபுரம், பிரைன்நகர், ஆரோக்கியநகர், மகிழ்ச்சிநகர், வட்டக்கோவில் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இதையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தூத்துக்குடியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  
    Next Story
    ×