search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தீப்பற்றி எரியும் காட்சி.
    X
    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தீப்பற்றி எரியும் காட்சி.

    ஸ்டெர்லைட் ஆலை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு- போலீஸ் குவிப்பு

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முன்பு இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sterlite #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் 17 இடங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் 73 நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் போராட்ட குழு சார்பாக ஏற்கனவே கண்டன பொதுக்கூட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. பொதுமக்கள் போராட்டம் காரணமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி புதுப்பிக்கப்படாததாலும் ஆலை மூடப்பட்டு உள்ளது. ஆலை முன்பாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை முன்பு இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு ஸ்டெர்லைட் ஆலை காவலாளிகள் வந்து பார்த்தபோது குண்டு வீசியவர்கள் யாரையும் காணவில்லை. இதுபற்றி சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் பகுதியில் இன்று பரபரப்பும், பதட்டமும் உண்டான‌து. ஸ்டெர்லைட் ஆலை முன்பு இன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #Sterlite #BanSterlite #TalkAboutSterlite
    Next Story
    ×