search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கோட்டையில் பீர் குடித்து கும்மாளமடித்த மாணவிகள்
    X

    வேலூர் கோட்டையில் பீர் குடித்து கும்மாளமடித்த மாணவிகள்

    வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்பாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    ‘நாகரீக வளர்ச்சி’ என்று பெருமைப்படும் நேரத்தில், காலம் கெட்டு, கலியும் முத்தி போச்சு...என்பதையும் உணர வேண்டும். பெண்கள் கோலம் போடுவதை போன்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்ட காலம் மலையேறி போய்விட்டது.

    போதையில் பெண்கள் ஆட்டம் போடும் போட்டோ, வீடியோக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிருவது ‘டிரண்டாக’ மாறி விட்டது. எல்லாவற்றிலும் சமம்...சமம் என்று ஆண்களை போலவே பெண்களும் மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

    ‘‘சேர்ந்து வாழ்வோம் இல்லையெனில் சேர்ந்து சாவோம்’’ என்ற வரிகள், காலப்போக்கில் வரலாற்று சுவடுகளாக மாறி, இப்போது ‘‘சேர்ந்து வாழ்வோம், சேர்ந்து குடிப்போம்’’ என்ற மன நிலைக்கு இன்றைய இளைய சமுதாயம் சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வாட்ஸ்-அப்பில் பெண் போலீஸ் சக நண்பர்களுடன் மது அருந்துவது வைரலாக பரவியது. இதையடுத்து, அந்த பெண் போலீஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோன்று மதுக்கடையில் பெண்கள் வரிசையில் நின்று மது வாங்குவது, சாலை உள்பட பொது இடங்களில் போதையில் பெண்கள் கிடப்பது போன்றவை, வேதனை ஏற்படுத்துகிறது.


    இந்த நிலையில், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட காரணமாக இருந்த சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்பாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில் மீது கல்லூரி மாணவிகள் 4 பேர் ‘கலகல’ சிரிப்புடன் கும்மாளமாக நடனமாடுகின்றனர். அவர்களில் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை டி-சர்ட் அணிந்த ஒரு மாணவி, கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர், ‘ஓவென’ சத்தம் போட்டு பீர் பாட்டில் மூடியை பற்களால் கடித்து திறக்கிறார்.

    பிறகு, பாட்டிலை வாயில் வைத்து பீரை மடக்மடக்கென குடிக்கிறார். 2 மடக்கு பீரை குடிக்கும் அந்த மாணவி, செல்போனில் வீடியோ எடுக்கும் தனது சக தோழியை பார்த்து, ‘எதுக்குடி வீடியோ எடுக்குற? என்று கேட்கிறார். அதற்கு வீடியோ எடுத்த மாணவி, ‘சும்மா தான் எடுக்கிறேன்’ என்கிறார்.

    அதற்கு ‘அடியே, அதை யாருக்காவது அனுப்பிட போற ஜாக்கிரதை’ என்று பீர் குடித்த மாணவி கூறுகிறார். ‘யாருக்கும் அனுப்ப மாட்டேன்’ என்று கூறும் வீடியோ எடுத்த மாணவி, தொடர்ந்து, வீடியோ எடுப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார்.

    அவருக்கு மற்ற 3 மாணவிகளும் பீர் பாட்டிலை ஒரு சேர பிடித்தும், பாட்டிலை மாறி, மாறி வாங்கி பீர் குடித்தும் வீடியோவுக்கு வித விதமாக ‘போஸ்’ கொடுக்கின்றனர். ஒரு வழியாக பீரை குடித்து காலி செய்யும் மாணவிகள், போதையில் கும்மாளமிடுகின்றனர்.

    அப்போது, கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பீர் பாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட மாணவிகளை பார்த்து முகம் சுளித்தனர். இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் தைரியாக செல்போனில் பதிவு செய்தது தான் வேடிக்கை.

    தற்போது, இந்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள், ஆண் பிள்ளைகளை மட்டும் உற்று கவனித்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோருக்கு ஒரு சவுக்கடி. இனியாவது, மாணவிகள், இளம்பெண்கள் மீதான பார்வையை கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பெற்றோர், கண்காணிக்க வேண்டும்.

    நல்லது எது? கெட்டது எது? என்பதை பெற்றோர் எடுத்து கூற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியைகளும் மாணவிகளுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை போதிக்க வேண்டும்.

    இளைய தலைமுறையினர் சீரழிவதை தடுக்க அரசும் மதுக்கடைகளை திறப்பதை விட்டு விட்டு ‘மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. #Tamilnews

    Next Story
    ×