search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சனை - வேதாரண்யத்தில் இருந்து நாளை விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி - பி.ஆர்.பாண்டியன்
    X

    காவிரி பிரச்சனை - வேதாரண்யத்தில் இருந்து நாளை விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி - பி.ஆர்.பாண்டியன்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வேதாரண்யத்தில் இருந்து நாளை விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது என்று எபி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #Cauveryissue #PRPandian #CauveryManagementBoard

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவிரி போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அரசு போராட்டத்தினை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வைகோ, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பரப்புரை பயணம் மேற்கொண்ட போது கல்வீசி கொலை வெறி தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.தமிழக காவல்துறை அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

    வைகோ மீது கல்வீசியவர்களை தடுக்க சென்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறைத் தண்டனை வழங்குவதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக காவல் துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் தகுந்த விளக்கத்தை தர வேண்டும் .

    போராட்டத்தினை திசை திருப்புகிற மோடி அரசாங்கம், போராட்டத்தின் நோக்கம் உணர்ந்து இது வரை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். கர்நாடகாவின் தேர்தலை காரணம் காட்டி தொடர்ந்து காவிரி வழக்கை திசை திருப்புவதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை பயன்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தொடர்ந்து சட்டத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லாமல் நடந்து வருகிறார். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும். காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்வதற்கே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுக்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும். போராடினால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்ற சூழ்நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாளை (25-ந் தேதி) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவு மேடையில் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி, சேலம், கரூர், தர்மபுரி, சென்னை, கடலூர், புதுச்சேரி, திருவாரூர் வந்து வருகிற 29-ந் தேதி பேரணி முடிவடைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue #PRPandian #CauveryManagementBoard

    Next Story
    ×