search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை நடத்திய பின் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை- தமிழிசை
    X

    விசாரணை நடத்திய பின் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை- தமிழிசை

    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்திய பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார். #SVShekher
    சென்னை:

    நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அனைத்து கட்சிகளும், எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

    பா.ஜனதா கட்சியிலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

    இந்த நிலையில் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இது பற்றி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-


    தெரிந்தோ, தெரியாமலோ எப்படி இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த செயலால் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

    இதுபற்றி விசாரிக்க முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன் தலைமையில் துணைத் தலைவர் சுப.நாகராஜன் உள்பட மற்றும் இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் விசாரித்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilnews
    Next Story
    ×