search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகையை நோக்கி, நாளை தலித் அமைப்புகள் கண்டன பேரணி
    X

    கவர்னர் மாளிகையை நோக்கி, நாளை தலித் அமைப்புகள் கண்டன பேரணி

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க கோரி தலித் அமைப்புகள் நாளை கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
    சென்னை:

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று தலித் அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

    இந்த கோரிக்கையை நிறைவெற்ற கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த பேரணி தொடங்குகிறது.

    இதில் பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள் பேரணியில் கோரிக்கைகளை வற்புறுத்தி முழக்கமிடுகிறார்கள்.

    பேரணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி, பகுஜன்சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இது குறித்து தலித் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அனைத்து தலித் மக்களும், மனித உரிமை அலுவலர்களும், கட்சி தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×