search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் பழங்குடியினருக்கு இலவச எரிவாயு இணைப்பு
    X

    கூடலூரில் பழங்குடியினருக்கு இலவச எரிவாயு இணைப்பு

    கூடலூர் கோடமுலா பகுதியில் பழங்குடியினர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோடமுலா பகுதியில் உஜ்வாலா தினத்தையொட்டி பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு அடுப்புடன் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆணையை கலெக்டர் இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.

    கிராம சுராச் அபியான் வாரவிழாவினையொட்டி 14-ந்தேதி முதல் 5.5.2018 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதில் சமூக நீதி நாள் தினம், தூய்மை பாரத நாள் தினம் என பல்வேறு தினங்கள் கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உஜ்வாலா தினத்தையொட்டி சமையல் எரிவாயு அடுப்புடன் கூடிய சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 69,098 அட்டைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் இல்லை. அரசின் இலக்கு அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்பது ஆகும். இன்று 15 பழங்குடியின பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆணைகளை பெற்ற பழங்குடியின பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×