search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டு தே.மு.தி.க.வினர்.
    X
    அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டு தே.மு.தி.க.வினர்.

    வேலூரில் அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து தே.மு.தி.க.வினர் மறியல்

    வேலூரில் அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை விமர்சனம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே தே.மு.தி.க.வினர் இன்று காலை போராட்டம் செய்தனர்.

    அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். அங்கு வந்த தெற்கு போலீசார், தே.மு.தி.க.வினரை தடுத்து நிறுத்தி தீயிட்டு கொளுத்த முயன்ற ஜெயக்குமார் உருவ பொம்மையை கைப்பற்றினர்.

    இதனால், போலீசாருடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதம் செய்தனர். பிறகு, மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர்கள் பால முருகன், புருசோத்தமன், ஜமுனாராணி, நகர இளைஞரணி செல்வராணி, பொது குழு உறுப்பினர் ஞானவேலு, அவைத்தலைவர் ராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.



    Next Story
    ×