search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நாடார் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நாடார் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தொடங்கி வைத்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், சென்னை புறநகர நாடார் பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, போரூர் நாடார் சங்க பொதுச் செயலாளர் ஆனந்தராஜ், மயிலை சந்திரசேகர், கிண்டி நாடார் சங்க தலைவர் பெருமாள், தி.மு.க. தேர்தல் பிரசார குழு சிம்லா முத்துச்சோழன் ஆகியோர் பேசினார்கள்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் கே.சி.ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், ராவணன் ராமசாமி நாடார், மாம்பலம் வினோத் நாடார், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நாடார் முரசு ஜூலியன் நாடார், காமராஜர் ஆதித்தனார் கழக சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், அருள் ரூபன், ஜெய்சங்கர், பொன்சேகர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், கருங்கல் ஜார்ஜ், அம்பத்தூர் விஜயகுமார், வைகுண்ட ராஜா உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன் வரவேற்று பேசினார். தலைவர் மின்னல் ஸ்டீபன், பொருளாளர் ஸ்டார் ராதா கிருஷ்ணன் நன்றி கூறினர்.
    Next Story
    ×