search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
    X

    காரைக்காலில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

    காரைக்காலில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் தைக்கால் தெருவைச்சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர் கடந்த 16-ந் தேதி இரவு காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சாந்தி சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.

    அப்போது சாந்தி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மர்ம நபர்களை விரட்டிச்சென்றனர். ஆனால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து சாந்தி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மாவட்ட சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் மரி கிறிடின் பால், நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்.இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராமசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் காரைக்கால் லெமேர் வீதி அருகே நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக, வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்களில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் காரைக்கால் கமால் தெருவைச்சேர்ந்த நாசர்(என்கிற) நிஜாமுதின்(வயது27), காரைக்கால் லெமேர் வீதி சின்னத்தம்பி நகரைச் சேர்ந்த பைசல்(என்கிற) அகமது(25) என்பதும், இவர்கள் 2 பேரும் கடந்த 16ந் தேதி, காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்பு கொண்டனர்.

    மேலும், காரைக்கால் திருமலைராயன்படினம் பகுதியில் 2 இடங்களில் பெண்களிடம் சங்கிலியை பறித்து தப்பியோடியதையும் ஒப்புகொண்டனர்.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிமிடருந்து 5 பவுன் சங்கிலி உட்பட ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 17 பவுன் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்த 2 பேரையும், மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×