search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
    X

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சேலத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.
    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்தி கிரிப்பட்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா முடிந்து 48-ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் சென்னை வானிலை மைய ஆராய்ச்சி இயக்குநர் பாலசந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வட மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் 1 சதவீதம் அதிகமாக இருக்கும்.

    வடகிழக்கு பருவ மழையின் போது சராசரி மழை அளவு இருக்கலாம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு ஏற்றம், இறக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×