search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி டெல்டா மாவட்டங்களில் 25-ந் தேதி முதல் 5 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    காவிரி டெல்டா மாவட்டங்களில் 25-ந் தேதி முதல் 5 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் 25-ந் தேதி முதல் 5 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற, மத்திய அரசை வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 25-4-2018 முதல் 29-4-2018 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி, மாவட்டம், பங்கேற்போர் விவரம் வருமாறு:-

    25-4-2018 - நாகப்பட்டினம் மாவட்டம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் - அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், அரியலூர் மாவட்டக் கழக செயலாளர் - தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளர் - ஆர்.டி.ராமச்சந்திரன்.

    26-4-2018 - தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்கள் - அமைப்பு செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் பி.தங்கமணி, இரா.துரைக்கண்ணு.

    27-4-2018 - திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்டங்கள் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ப.குமார் எம்.பி., டி.ரத்தினவேல் எம்.பி.

    28-4-2018 - திருவாரூர் மாவட்டம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் காமராஜ். கரூர் மாவட்டம் - நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    29-4-2018 - கடலூர் கிழக்கு மற்றும் கடலூர் மேற்கு மாவட்டங்கள் - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்.பி., புதுக்கோட்டை மாவட்டம் - அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளர் பி.கே.வைரமுத்து.

    அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×