search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பையில் ஆதார் அட்டைகள்- திருப்பூர் தபால் ஊழியர் சஸ்பெண்டு
    X

    குப்பையில் ஆதார் அட்டைகள்- திருப்பூர் தபால் ஊழியர் சஸ்பெண்டு

    திருப்பூரில் தபால்களை சரியான முறையில் பட்டுவாடா செய்யாத தபால் ஊழியர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள அலகுமலை பி.ஏ.பி. வாய்க்கால் ஒரத்தில் உள்ள குப்பை மேட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆதார் கார்டுகள், வங்கி கணக்கு, டெலிபோன் பில்கள்,எல்.ஐ.சி. தபால்கள் உள்ளிட்டவைகள் கொட்டப்பட்டு இருந்தது.

    இதனை திருப்பூர் தெற்கு தாசில்தார் கோபால கிருஷ்ணன் கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி விசாரணை நடத்தினார்.

    இந்த ஆதார் அட்டைகளில் பெரும்பாலானவைகள் பெங்களூருவில் இருந்து வந்தது தெரிய வந்தது. எனவே பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் வினியோக துணை இயக்குனர், திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கோபிநாதன் ஆகியோரும் விசாணை மேற்கொண்டனர்.

    குப்பைமேட்டில் கிடந்த தபால்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி தொடங்கி 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை திருப்பூர் காந்தி நகர் தபால் நிலையத்தால் பெறப்பட்டவை ஆகும்.

    இந்த தபால்களை அங்கு தபால் ஊழியராக வேலை பார்க்கும் கோபால கிருஷ்ணன் டெலிவரி செய்ய வேண்டும். அவர் தனக்கு பதிலாக ராகுல் என்பவரிடம் தபால்களை ஒப்படைத்துள்ளார்.

    ஆனால் ராகுலால் தபால்களை பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதனை அங்குள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளார். நீண்ட நாட்களாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் குப்பையில் கொட்டியது தெரிய வந்தது.

    தபால்களை சரியான முறையில் பட்டுவாடா செய்யாத தபால் ஊழியர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பட்டுவாடா செய்ய முடியாத தபால்கள் இலாகா விதிகளின் படி கையாளப்படும் என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×