search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே கோவை பெண் போலீசிடம் 12 பவுன் நகை அபேஸ்
    X

    பெருந்துறை அருகே கோவை பெண் போலீசிடம் 12 பவுன் நகை அபேஸ்

    பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பேங்கில் இருந்து நகையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய பெண் போலீசின் பர்சில் இருந்த 12 பவுன் தங்கநகை மற்றும் பணத்தினை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    ஈரோடு, கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி அன்புமதி(57). இவர் கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பேங்க் லாக்கரில் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு தனது தாய், மகள் மற்றும் பேத்தியுடன் ஊருக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

    அப்போது, பெருந்துறை பழைய பஸ் நிலைய ரோட்டில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு அங்கிருந்து, பெருந்துறை புதிய பஸ்நிலையம் வந்துள்ளார்.

    அங்கு தனது பேக்கில் இருந்த பர்ஸ் காணாமல் போனது தெரிய வந்தது. காணாமல் போன அந்த பர்சில் பேங்க் லாக்கரில் இருந்து எடுத்து வந்த 12 பவுன் தங்கநகைகள், அடையாள அட்டை மற்றும் 9 ஆயிரம் பணம் ஆகியவை இருந்தது.

    அன்புமதியிடம் இருந்த பணப்பையை மர்ம ஆசாமி யாரோ நூதன முறையில் பறித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு திரும்பி வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தும், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போகவே, பெருந்துறை போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×