search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்
    X

    வானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்

    கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட வானதி சீனிவாசன், சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

    இதற்காக இந்த துறையில் அனுபவம் வாய்ந்த கட்சி நிர்வாகிகளை பல மாநிலங்களில் இருந்து திரட்டி உள்ளனர். இந்த குழுவின் பொறுப்பாளராக தமிழக பா.ஜனதா துணை தலைவர் வக்கீல் வானதி சீனிவாசனை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

    பெங்களூரில் திறக்கப்பட் டுள்ள தகவல் தொழில் நுட்ப பிரிவு அலுவலகத்தில் இந்த குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இதே போல் மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் தமிழர்கள் நிறைந்த பகுதியில் ஆதரவு திரட்டுவதற்காக தமிழக நிர்வாகிகள் நரேந்திரன், நந்தகுமார், கே.டி.ராகவன், பாயின்ட் மணி, பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சமூக வலைத்தளங்களில், பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகத்தில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் ஏன் மாற்றம் வரவேண்டும் என்பது பற்றி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    காங்கிரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சனங்கள், காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பதில் கொடுக்கப்படுகிறது. கன்னடம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வலைத்தளங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா ஆகியோருக்கு தலா 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    Next Story
    ×