search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் பிழைகளை திருத்த மீண்டும் வாய்ப்பு
    X

    அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் பிழைகளை திருத்த மீண்டும் வாய்ப்பு

    அரசு பொதுத் தேர்வுகள் எழுதி உள்ள மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்கு தேர்வுத்துறை மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

    தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் தான் மதிப்பெண் சான்றிதழ்களில் அச்சிடப்படும் என்பதால், அதில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு தேர்வுத்துறை கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.

    10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் பெயர் உள்ளிட்டவற்றில் எழுத்துப் பிழை இருப்பின், கடைசி வாய்ப்பை பயன்படுத்தி சரி செய்யலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

    பெயர் திருத்தம் தொடர்பான விபரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதிக்குள் சிஇஓ-க்களிடம் அளிக்க வேண்டும். சிஇஓ-க்கள், வரும் 25 முதல் 27-ம் தேதிக்குள் அந்த விபரங்களை, தேர்வுத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது.
    Next Story
    ×