search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் நடந்த தி.மு.க. மகளிரணி, தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பேசிய காட்சி.
    X
    சேலத்தில் நடந்த தி.மு.க. மகளிரணி, தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பேசிய காட்சி.

    கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- கனிமொழி

    கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு என காமலாபுரம் விமானநிலையத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கனிமொழி எம்.பி ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது அரசு செயல்பாடாத அரசாக உள்ளதால் தினந்தோறும் போராட்டங்களாக உள்ளது. தமிழகத்தில் கவர்னர் பல்கலைக்கழக விவகாரத்தில் விசாரணை கமி‌ஷம் அமைக்க அதிகாரம் கிடையாது. அப்படி அமைத்தாலும் அதில் பெண்கள் இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதை மதிக்காத கவர்னர் தன்னிச்சையாக அமைத்துள்ளார்.

    கவர்னர் பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. மேலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு.

    தி.மு.க. ஆட்சியின்போது விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அப்போதே அந்த திட்டத்தை கைவிட்டோம். தற்போது அ.தி.மு.க. அரசு விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் என அவித்துள்ளது. எப்போதும் தி.மு.க. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் எதிர்க்கும். இதே போன்று சேலம் விமான நிலைய விரிவாக்கத்தையும் தி.மு.க. எதிர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
    Next Story
    ×