search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்
    X

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்

    வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குருவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வந்தார்.

    புத்தாண்டு தினத்தில் திடீரென்று உடல்நிலை மோசம் அடைந்ததால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெ.குரு உடல்நலம் வேண்டி பா.ம.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். அன்பு மணி எம்.பி., சவுமியா அன்புமணி ஆகியோர் வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள். பா.ம.க. துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார். கட்சி நிர்வாகிகள் ஞானபிரகாசம், அனந்தகிருஷ்ணன், எம்.கே.பிரகாஷ், ஜெய், மேஷ், பாபு, ரவி, சண்முகம், பாண்டு ரங்கன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×