search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர்- சிறுமிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பின்வரும் இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி - சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி -சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் உள்ள பின்வரும் விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையாக விளங்குவதற்கு 6ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சிறுவர் -சிறுமிகளுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 11.05.2018 அன்று காலை 8 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

    சிறுவர்களுக்கான விளையாட்டு 1) தடகளம் 2) இறகுப்பந்து 3) டேக் வோண்டா 4) குத்துச் சண்டை 5) ஜிம்னாஸ்டிக்ஸ் 6 ) நீச்சல் மற்றும் 7) டென்னிஸ் .

    சிறுமிகளுக்கான விளையாட்டு 1) தடகளம் 2) இறகுப் பந்து 3) மேசைப்பந்து 4) ஜிம்னாஸ்டிக்ஸ்.

    இதில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ -மாணவிகள் 2018-2019 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படி வங்களை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.05.2018 தேர்வு அன்று காலை 8 மணிக்குள் நேரில் மாநிலத் தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×