search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்- காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக் குழு வாபஸ்
    X

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்- காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக் குழு வாபஸ்

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு திரும்ப பெறப்பட்டது. #NirmalaDevi
    சென்னை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியானது. பூதாகரமாக வெடித்துள்ள இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆளுநரும் தனியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    கல்லூரி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். தற்போது வழக்கின் முக்கியத்துவம் கருதி நிர்மலா தேவி மீதான குற்ற வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலாலை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை இன்று சந்தித்து, நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். பின்னர், பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அத்துடன், ஆளுநர் அறிவித்த விசாரணைக் குழு அதிகாரி சந்தானத்துக்கு, பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் தெரிவித்தார். #NirmalaDevi #TamilNews
    Next Story
    ×