search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈழத்தமிழர்கள் நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்யவேண்டும்- விக்னேஸ்வரன்
    X

    ஈழத்தமிழர்கள் நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்யவேண்டும்- விக்னேஸ்வரன்

    தமிழகத்தில் இருக்கும்‌ ஈழத்தமிழர்கள் நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்யவேண்டும் என்று நெல்லையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளார். தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று காலை நெல்லை வந்தார். அவருக்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் மணி பட்டர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு வந்த அவரை டீன் நீலாவதி தலைமையில் மாணவிகள் வரவேற்றனர். பின்பு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

    பின்னர் விக்னேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்ய கூடிய வாய்ப்பு அரசுக்கு இருக்கிறது.

    இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

    பின்னர் அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×