search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை வழக்கமாக நடக்கிறது - முன்னாள் துணைவேந்தர்கள்
    X

    பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை வழக்கமாக நடக்கிறது - முன்னாள் துணைவேந்தர்கள்

    தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை நடப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறி உள்ளார்.
    சென்னை:

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளை செக்சுக்கு அழைத்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.

    இது சம்பந்தமாக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி இதுகுறித்து கூறியதாவது:-

    தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை நடப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மாணவிகளே நேரடியாக இந்த புகார்களை கொடுத்துள்ளனர்.

    ஆனால் புகார் கூறப்பட்ட பேராசிரியர்கள் மீது இருவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இதுசம்பந்தமாக அமைக்கப்படும் விசாரணை கமிட்டிகளாலும் எந்த பலனும் இருப்பதில்லை.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெரிய அளவிலான அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தற்போது இதுபற்றி விசாரணை நடத்த துணைவேந்தர் விசாரணை குழுவை அமைத்துள்ளார். அவர் விசாரணை குழுவை அமைப்பதற்கு அரசு எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறியதாவது:-

    செக்ஸ் புகார் தொடர்பான விசாரணை கமிட்டியில் சிவில் உரிமை அமைப்புகளை சேர்ந்த வலுவான நபர்களை சேர்க்க வேண்டும். மேலும் மிகச்சிறந்த நபர்கள் அதில் இடம்பெற வேண்டும் தற்போது வந்துள்ள புகார் மிகப்பெரிய குற்றத்தின் ஒரு துளியாகத்தான் இருக்குமா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய நெட் வொர்க் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதில் நடக்கும் தவறுகள் அனைத்தும் முழுமையாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு தமிழ் நாட்டில் பல்கலைக்கழகத்தின் முழு சிஸ்டங்களையும் மறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும். அதிசக்தி வாய்ந்த நுட்பங்களை புகுத்தி தவறுகளை களைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய பெண்கள் ஜனநாயக அமைப்பின் உறுப்பினர் நிர்மலாராணி கூறும் போது, பல்கலைக்கழகமும் சம்பந்தப்பட்ட கல்லூரியும் ஏழை மாணவிகளை இது போன்ற சூழ்நிலைக்கு இழுத்து சென்றுள்ளன.

    இந்த வி‌ஷயத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி இதில் உள்ள அதிகார சக்தி படைத்த நபர்கள் மற்றும் பேராசிரியரின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்றார்.
    Next Story
    ×