search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்கள் பயந்து நடுங்குவது ஏன்?- தினகரன் கேள்வி
    X

    அமைச்சர்கள் பயந்து நடுங்குவது ஏன்?- தினகரன் கேள்வி

    ஜெயலலிதா மரணம் விசாரணை குறித்து அமைச்சர்கள் பயந்து நடுங்குவது ஏன்? என்று தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் அதிகாரியாக செயல்படவில்லை. அரசியல்வாதி போல் செயல்படுகிறாரே?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன நடந்தது என்று கேட்கிறார்கள். ராம மோகன ராவ் ஸ்டேட்மெண்ட் யாருக்கும் சார்பாகவும் இல்லை. யாருக்கும் எதிர்ப்பாகவும் இல்லை. அவர் ஒரு தலைமை செயலாளராக இருந்தபோது என்ன நடந்ததோ அதை சொல்லி உள்ளார்.

    அதில் எங்கள் வக்கீல் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார். இதில் 2 அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் அலறுவதை பார்த்தால் எனக்கு சந்தேகம் வருகிறது. எதற்கு அமைச்சர்கள் பயப்பட வேண்டும். ராமமோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற அளவுக்கு என்ன இருக்கிறது.

    அந்தக் காலத்தில் நடந்ததை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். எந்தெந்த அமைச்சர்கள் வந்தார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். முதல்- அமைச்சர் பொறுப்பில் இருந்த பன்னீர்செல்வம் எப்போது எல்லாம் இருந்தார். காவிரி வழக்கின்போது, அம்மா என்னென்ன ஆலோசனைகள் வழங்கினார் என்றெல்லாம் மருத்துவமனையில் இருந்தபோது ஆலோசனைகள் வழங்கினார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

    விசாரணை ஆணையத்தில் அந்த காப்பியை வாங்கி பார்த்தால் தெரியும். ராமமோகனராவின் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி வாக்குமூலம் தெளிவாக இருக்கிறது. அவர் யாரையும் பாதுகாத்து சொல்லவில்லை, யாருக்கும் எதிர்ப்பாகவும் சொல்லவில்லை.

    இதில் என்ன பயம், எதற்காக இதில் பாதிக்க வேண்டும், இரண்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயப்படுகிறார்கள். அந்த பயத்தின் வெளிப்பாடாகத்தான் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஜெயக்குமார் ஹிட்லர் போன்று பேசுகிறார். இந்த ஆட்சி முடிந்ததும் யார்-யார் கைது செய்யப்படுவார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

    சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகி வருகின்றன. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொய்யானவை. இதை ஏற்கனவே தி.மு.க. பரப்பியது.

    அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பரப்பினார். அதன் பிறகு பொய்யானவை என்பது மக்கள் மன்றத்தில் அவர்களே விசாரணை ஆணையம் வைத்து தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

    கேள்வி:- ஆட்சி கவிழப் போகிறது என்று தொடர்ந்து சொல்லி வருகிறீர்களே...?

    பதில்:- நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்ததும் அதை தொடர்ந்து பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கும் நிலுவையில் இருக்கு. நீதிமன்றம் உத்தரவிட்டதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருவோம். நீதிமன்ற தடையினால் அது நிற்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் சிலிப்பர்செல்கள் அன்றைக்குத்தான் தாங்கள் யார் என்று காட்டுவார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×