பாலையம்பட்டி:
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நிர்மலா ராணி நிருபர்களிடம் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான நோக்கத்தில் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கல்வியை போதிக்க வேண்டியவர் புரோக்கராக செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்த புகார் குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை நேர்மையாக நடத்தும் என்பதில் நம்பிக்கை இல்லை.
பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் உண்மை மூடி மறைக்கப்படும்.
கல்வித்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்திய நிர்மலா தேவியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.