search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்- 6 நாட்களில் 12,831 பேர் பங்கேற்பு
    X

    பெரம்பலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்- 6 நாட்களில் 12,831 பேர் பங்கேற்பு

    பெரம்பலூரில் நடந்துவரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 6 நாட்களில் 12,831 இளைஞர்கள் பங்கேற்றனர்.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 10-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்த முகாம் வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. முகாமில் முதல் நாளில் 1,450 பேரும், 2-வது நாளில் 1,929 பேரும், 3-வது நாளில் 2,503 பேரும், 4-வது நாளில் 2,536 பேரும், 5-வது நாளில் அரியலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2,524 பேர் கலந்துகொண்டனர். நேற்று 6-வது நாள் நடைபெற்ற முகாமில் 1,889 பேர் கலந்து கொண்டனர். அதன்படி கடந்த 6 நாட்களில் மொத்தம் 12,831 பேர் பங்கேற்று உள்ளனர்.

    நேற்று நடந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அடிப்படை உயரத்தேர்வும், 1.6 கிலோமீட்டர் தூரத்தை 5.45 நிமிடங்களில் கடப்பதற்கான ஓட்ட போட்டி, நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றது. இதில் தேர்வானவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வுகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
    Next Story
    ×