search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சூர் தேவாலயத்தில் பட்டாசு குடோன் வெடித்து வாலிபர் பலி
    X

    திருச்சூர் தேவாலயத்தில் பட்டாசு குடோன் வெடித்து வாலிபர் பலி

    திருச்சூர் தேவாலயத்தில் வாணவேடிக்கையின் போது தீ பொரி பட்டாசு குடோன் மீது விழுந்ததில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் அங்கமாலி அருகே உள்ள கருக்குட்டியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

    விழா தொடங்கி அரை மணி நேரத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி தொடங்கியது. பக்தர்கள் அதனை கண்டு ரசித்தனர். எதிர்பாராதவிதமாக பட்டாசு தீ பொரி பட்டாசு அடுக்கி வைக்கப்பட்டிருந்து ஓலை குடோனில் விழுந்தது.

    குடோன் குடிசையால் ஆனது என்பதல் தீ மளமளவென பிடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது பற்றியது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பேன்சி ரக வெடி மற்றும் வாண வெடிகள் பக்தர்கள் கூட்டத்தில் ராட்சத தீ பிழம்பாக வெடித்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி மகன் சைமன் (வயது 20), மெஸ்ஜோ (30), பாபு (40), ஸ்டீபன் ஜோஸ் (30), ஜெய்பீம், ஜேம்ஸ், பிஜூ உள்பட 8 பேர் சிக்கினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே சைமன் உடல் கருகி பலியானார். மற்ற 7 பேரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×