search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் தினகரன் ஆஜர்
    X

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் தினகரன் ஆஜர்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆஜரானார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரன். கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த போது, அமைச்சர்கள் எல்லாம் கோமாளிகள் என்று நினைத்தேன். அவர்கள் எல்லாரும் கீழ்பாக்கம் செல்லவேண்டியவர்கள் என்று கூறியிருந்தார்.

    இந்த கருத்து தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த வழக்கை மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீல் கவுரி அசோகன் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், ‘முதல்அமைச்சர், அமைச்சர் ஆகியோர் குறித்து டி.டி,வி.தினகரன் தெரிவித்த கருத்து, பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் உள்ளது. எனவே, டி.டி.வி.தினகரன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது. டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் நேரில் ஆஜராகினார். அப்போது அவருடன் ஆதரவாளர்கள் பலர் கோர்ட்டில் குவிந்திருந்தனர். இதையடுத்து, அவருக்கு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்பட்டன.

    கூட்டமாக வந்துள்ளதால், இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க முடியாது. எனவே, ஜூன் 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று நீதிபதி சுதா தேவி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, டி.டி.வி. தினகரனின் வக்கீல் ஆஜராகி, ‘நாங்கள் கூட்டத்தை எல்லாம் போகச் சொல்லி விடுகிறோம். இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைப்பதாகவும், அப்போது டி.டி.வி.தினகரன் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×