சென்னை:
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சி 6-வது வார்டு தி.மு.க. கிளை துணை செயலாளர் ரமேஷ். இவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீடு அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குளித்த ரமேசை மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன், உள்பட தி.மு.க.வினர் ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவின் உறவினர் சரவணன் சுரேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.
மறைந்த சரவணன் சுரேஷ்சுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தீக்குளிப்பு சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் மாநில நலன் காக்கவும், மண்ணின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் அறவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தேவை என்பதால், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் நிச்சயமாக ஈடுபட வேண்டாம் என்றும் மீண்டும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.