search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்
    X

    காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்

    ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். #seeman #ipl #cauveryissue
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:- 

    காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு. தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். 

    நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா?. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.

     யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை  வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை.  நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்  நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை. 

    காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு. ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது” 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews #seeman #ipl #cauveryissue
    Next Story
    ×