என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
Byமாலை மலர்14 April 2018 5:43 AM GMT (Updated: 14 April 2018 5:43 AM GMT)
அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #AmbedkarJayanthi
சென்னை:
அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் படத்துக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்துக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் தடுப்போம். எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த தீர்ப்பு தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
Next Story
×