search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல்-122 பேர் கைது
    X

    உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல்-122 பேர் கைது

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    உளுந்தூர்பேட்டை:

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் உளுந்தூர் பேட்டையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உளுந்தூர் பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் திருச்சியில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ஜோகிந்தர்சிங், போஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வீர.விடுதலை செல்வன் தலைமையில் 47 பேர் இன்று காலை 11.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தனர்.

    பின்னர் அவர்கள் மன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற பாம்னி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 47 பேரை அரங்கண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×