search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

    சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் இன்று விலை உயர்ந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழ் வருட பிறப்பான சித்திரை 1-ந் தேதி வரும் சனிக்கிழமை தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும். அதே போல் கேரளாவிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை சித்திரை விஷூ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    திருவிழா என்றால் கேரளாவில் சைவ உணவு பதார்த்தங்கள் அதிக அளவில் தயார் செய்து உறவினர்களுக்கு வழங்குவது பிரபலம்.

    ஓணம் பண்டிைகயைப் போலவே கேரளாவில் சித்திரை விஷூவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய நாள் தங்கள் வீடுகளில் 16 வகை காய்கறிகள் கொண்டு விதவிதமான கூட்டு, பொரியல், பச்சடி, கிச்சடி, பிரதமன், எரிசேரி போன்றவை தயார் செய்வார்கள். அதற்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து இன்று அதிக அளவு காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக விற்பனையானதை விட இன்று அனைத்து காய்கறிகளும் விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாற்று வெங்காயம் ரூ.22, உருண்டை மிளகாய் ரூ.22, சம்பா மிளகாய் ரூ.10, பூசணி ரூ.11, முருங்கை ரூ.35, பீன்ஸ் ரூ.22, சவ்சவ் ரூ.17, அவரை ரூ.38, நார்த்தை ரூ.10 என்ற விலையில் விற்பனையானது. தேங்காய் கிலோ ரூ.50-க்கும், கொத்தமல்லி ரூ.20-க்கும் விற்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சித்திரை விஷூ பண்டிகைக்காக இன்று காலை முதலே வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இன்றும் நாளையும் அதிக அளவு காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாரம் சனிக்கிழமை விடுமுறை இருக்காது என்றும் வழக்கம் போல் மார்க்கெட் செயல்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×