search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- பொன்முடி மனைவி வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார்
    X

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- பொன்முடி மனைவி வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார்

    பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மனைவி வீட்டில் கருப்பு கொடி ஏற்றினார்.

    விழுப்புரம்:

    பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

    விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

    விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. வீடு விழுப்புரத்தில் கிழக்கு புதுவை சாலையில் உள்ள திருப்பானந்தாழ்வார் தெருவில் உள்ளது. இந்த வீட்டின் முன்பு உள்ள கொடிகம்பத்தில் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பொன்முடி இன்று காலை கருப்பு கொடி ஏற்றினார். இதேப்போல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் வழுதரெட்டி சாலையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

    விழுப்புரத்தில் காங்கிரஸ் நகர துணை தலைவர் சிவாஜி கிருஷ்ணன் தனது சைக்கிளில் கருப்புகொடி கட்டி நகர் முழுவதும் வந்தார். அவர் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பியவாறே சைக்கிளை ஓட்டி சென்றார்.

    உளுந்தூர்பேட்டையில் நகர செயலாளர் டேனியல் ராஜ், ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தை,ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று இரவே வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றினர். இதனால் உளுந்தூர்பேட்டை முழுவதும் கருப்பு கொடிகளாக காட்சி அளித்தன. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதேப்போல் உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள எலவனாசூர்கோட்டை, ஆசனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

    Next Story
    ×