தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு 6 வாரகாலக் கெடு கொடுத்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவருக்கு இன்றைய நாளை துக்க நாளக காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்தனர்.
இதேபோல் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சையில் காமராஜர் மார்க்கெட் வியாபரிகள் ஒவ்வொருவரும் தங்களது கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போன்று தஞ்சையில் கீழவாசல், நாஞ்சிக்கோட்டை, மருத்துவக்கல்லூரி பகுதி, சூரக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது போன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சியினர், விவசாயிகள் என பலரும் இன்று கருப்பு சட்டை அணிந்தும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் இருப்பதை காண முடிந்தது.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடை மருதூர், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், வல்லம், ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள், விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் விவசாயிகள் சிலர் இன்று கருப்பு கொடியை கையில் ஏந்தி கொண்டு தங்களது நிலத்தில் வேலை பார்த்தனர்.
விவசாயிகள் கையில் கருப்பு கொடியை வைத்து கொண்டு நடவு பணிகளை மேற்கொள்வதை பார்த்து அப்பகுதியினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டும், வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களின் நுழைவு வாயிலிலும் கருப்பு கொடி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.
திருவாரூர் மாவட்டமான மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கை மான் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் தங்கள் வீடு முன்பு கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் இன்று 6-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து இந்த பயணம் தொடங்கியது. அப்போது வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் கருப்பு கொடிகட்டப்பட்டிருந்தது.
இதேபோல் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், பொறையாறு, தரங்கம் பாடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து கொண்டும் கடைகள், வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டியிருந்தனர். #tamilnews