search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
    X

    ஊட்டியில் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

    நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறத்தப்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் எடச்சேரி அரங்கில் நடைப்பெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ராமு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கூட்டத்தில் அம்பேத்காரின் பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 14ந் தேதி கோத்தகிரி வட்டாரத்தில் அனைத்து இடங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி தெருமுனை பிரச்சாரம் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.

    நீலகிரி மாவட்டதில் உற்பத்தியாகி கர்நாடக மாநிலம், “கபினி” அணைக்கு தண்ணீர் செல்லும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×